


எனக்கு மச்சான் முறை என்றாலும் என்னை அன்பாக தம்பி உதயகுமார் என்று தானே அழைப்பீர்கள். எனக்கு அண்ணன் இல்லாத குறையை நீங்கள் தானே தீர்த்து வைத்தீர்கள். உங்கள் உடன் பிறவா சகோதரி கமலாம்பிகை அவர்களிடம் சொந்த சகோதரி போல் தானே பழகினீர்கள். எனது மனைவியும் உங்கள் மீது அண்ணா அண்ணா என்று எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதும் எனக்கு தெரியும். உங்கள் இருவரினதும் பாசப்பிணைப்பில் இன்னும் ஒரு பாசமலர் திரைப்படத்தை நான் பார்த்தேன். எனது மனைவி மட்டுமா மனைவியின் சகோதரர்கள் மீதும், மனைவியின் பெற்றோர்கள் மீதும் அதாவது எனது மாமா மாமி மீதும் எவ்வளவு அன்பைப் பொழிந்தீர்கள் மச்சான். சில வருடங்களுக்கு முன்னர் உங்கள் வீட்டிற்கு நான் வந்திருந்த போது உங்கள் இயலாத வயதிலும் வீட்டின் பின்புறத்தில் ஏதோ அலுவலக இருந்த நீங்கள் உங்கள் அந்த இயலாத தன்மையிலும் புன்னகை தவழும் பூ முகத்துடன் ஓடி வந்து "தம்பி உதயகுமார் வாருங்கள்"என்று அன்பாக அழைத்தீர்களே மச்சான் இனிஅந்த புன்னகையை எப்போது காண்பேன் மச்சான்? நான் இலங்கை தலைநகர் கொழும்பில் வேலை செய்த பொழுது நீங்கள் கொழும்பு வரும் வேளைகளில் நான் இருந்த வீட்டிற்கு வந்து என்னுடன் பொழுதை ஆனந்தமாக கழிப்பீர்களே மச்சான். உங்கள் மரணத்தால் அந்த நினைவுகள் என்னை வாட்டி எடுக்கின்றதே மச்சான். மச்சான் எங்கு சென்றீர்கள்? உங்கள் பெற்றோர்களையும், உங்கள் அன்பு சகோதரியையும் நீங்கள் சின்னையா சின்னம்மா என்று அழைக்கும் எனது மாமா மாமியையும் உங்கள் உடன் பிறவா சகோதரனையும் பார்க்க சென்றீர்களா? அல்லது நான் இந்த பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டேன் அந்த வானுறையும் தெய்வத்துடன் சங்கமம் ஆகுவோம் என்று சென்றீர்களா? மச்சான் எல்லோரையும் பார்த்தது காணும். திரும்பி வாருங்கள். என்ன செய்வது நாம் பூமிக்கு ஒரு யாத்திரை வந்தோம். யாத்திரை முடிந்ததும் நித்திரை கொள்வோம். இது உலக நியதி. மச்சான் நீங்களும் அந்த யாத்திரை முடிந்து சென்றீர்கள்? ஆனால் நிச்சயம் ஒன்று மச்சான். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த நீங்கள் வானுறையும் தெய்வத்துடன் சங்கமம் ஆகுவீர்கள். இது நிச்சயம். அப்படி ஆகவேண்டுமென அந்த எல்லாம் வல்ல இறைவனை நானும் பிரார்த்திக்கிறேன்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.