யாழ். கோப்பாய் தெற்கு இருபாலை டச் ரோட்டைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லதுரை இராசலிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
ஓர் திங்கள் ஆனதுவோ...
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டபிள்ளைகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடன் வந்து உதவி புரிந்தோருக்கும், தொலைபேசி, நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக அனுதாபம் தெரிவித்தோருக்கும், மலர் வளையங்கள், கண்ணீர் அஞ்சலி ஊடாக எங்கள் துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு பல்வேறு வழிகளிலும் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.