13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை பத்மநாதன்
சுப்பிரின்டன் - கொழும்பு துறைமுக சரக்குக் கூட்டுத்தாபனம்
வயது 81
அமரர் செல்லத்துரை பத்மநாதன்
1929 -
2011
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன் மேற்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உங்களைப் பறித்து பதிமூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்- உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க- ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்...
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்...
தகவல்:
குடும்பத்தினர்
Anyone can be forgotten but not you who chose a life of selflessness and generosity.