Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1929
இறப்பு 23 AUG 2011
அமரர் செல்லத்துரை பத்மநாதன்
சுப்பிரின்டன் - கொழும்பு துறைமுக சரக்குக் கூட்டுத்தாபனம்
வயது 81
அமரர் செல்லத்துரை பத்மநாதன் 1929 - 2011 கரம்பொன் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன் மேற்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கை என்பது இறைவன் அவன்
வகுத்த வரைதானே அடுக்கடுக்காக
ஆண்டுகள் பதினொன்று சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால் உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!

அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices