யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் ஊற்றாய் பாசத்தின் திருவுருவாய்
ஆலமரமாய் வாழ்ந்து அன்பு நிழல் அளித்தீரே
ஆணி வேரே சாய்ந்த பின் ஆறுதல் தருவது யாரோ!
கண்கள் கலங்குகிறதே காற்று வீச மறுக்கிறதே
உம் மறைவுதனை எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!
கதறி அழும் உம் உறவுகளுக்கு
யார் இனி ஆறுதல் சொல்வார்கள்?
கவலைகள் தீர கண்திறந்து பாராயோ?
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்..
மனைவி புலம்பல்.!!!
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
பிள்ளைகள் புலம்பல்..!!!
முதலாம் அண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பா!
முதலாம் ஆண்டு அல்ல பலயுகம் கடந்தாலும்
ஏதோ வொன்றாய் உனது ஞாபகம் அப்பா!
முன்னோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த அப்பா!
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்
நின் பேரக்குஞ்சுகள் புலம்புகின்றோம்
இனி தாத்தா என்றுஅழைக்க யாருண்டு இனியெமக்கு!
பேரப்பிள்ளைகள் புலம்பல்.!!!
எமக்கு அறிவுரைகள் கூறி
அன்புடனே சோறூட்டி ஆளாக்கி விட்டவரே
இன்று தெய்வமாய் உயர்ந்து நின்று
எமக்கு ஆசி வழங்குகின்றாய்
உங்களின் ஆசியும், ஆசிர்வாதமும் என்றென்றும்
எமக்கு கிடைக்க வேண்டுகின்றோம்
அவனியில் நீங்காத புகழுடன்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வங்களே என்றும்
எங்கள் உள்ளங்களில் நீங்காத தீபங்களாக
ஒளிர்ந்து கொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!