யாழ். இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெற்ற தாய் நீங்கள் எம் மீது தீராத பற்று வைத்து வளர்த்தீர் பாலகராய் நாம் இருக்கையிலே நாம் பசித்திருக்க விடவில்லை உற்றவளாய் எம் உயர்விற்காய் உம்மை ஓயாது அர்ப்பணித்தீர் உடனிருந்து கவனித்து உலகெங்கும் நாம் செல்ல உதவினீர்கள் சுற்றத்தார் அனைவரோடும் அன்பொழுகப் பழகியதால் அவர் சிந்தையில் பதிந்த தாயாக தங்கையாக நண்பியாக திகழ்ந்தீர் முற்றத்து மல்லிகை போல் மணம் வீசி நின்றீர்கள் முடிவு நாள் வந்தவுடன் எமைப் பிரிந்து சென்றீர்கள்
பெரியதோர் குடும்பத்தின் தலைவியாய் வீற்றிருந்து பெண்ணின் பெருமைதனை பறை சாற்றி நின்றீர்கள் உரியவராய் அன்பைச் சொரிந்து அக்கறையும் காட்டி உத்தம அன்னை என ஊரவர்கள் பேசும் பேறு பெற்றீர் பிரியமுள்ள பாட்டியாய் பேரர் பூட்டர் பெப்பாட்டியாய் மற்றவர் மீதெல்லாம் பாசத்தைக் கொட்டி நின்ற பெண் தெய்வம் தங்களை கரியதொழு நாளில் இழந்தோம் காலங்கள் கடந்து சென்றிடினும் கனிவின் பொக்கிசமாம் உமை நாம் என்றும் மறவோம் அம்மா
கண்ணீர்ப் பூக்கள்
செல்லத்துரை கனகம்மா
ஈன்றெடுத்த அன்னையே
ஈவதற்கு ஏதுமில்லை உன்
அன்புக்கு ஈடாக....
தாழாத மனத்தினளாய்
தளராத குணத்தினளாய்
தள்ளாத வயதினிலும்...
தளராமல் அணைத்த கரம்
தேடுகின்றோம்...
தொலைத்துவிட்டோம் என்று
நால் எண்ணவில்லை..
காணவில்லை என்றெண்ணிக்
கலங்குகின்றோம்...
எம்முள்ளே நின்று நீங்கள்
என்றும் வாழவைப்பீர்கள்....
என்பது நாமறிவோம்.
ஆனாலும்
அம்மா என்றழைத்தவுடன்
கேட்பதற்கு யாருமில்லை...
அன்பாக கட்டியணைக்கத் துடிக்கின்றோம்...
உங்கள் முன் என்றும் நாம்
குழந்தைகளாய் வலம் வந்தோம்....
இனி நாம் என்செய்வோம்????
தூரதேசம் இருந்தாலும்
தேடுவதற்கு ஓர் தாயுண்டு
என்றெல்லாம் மகிழ்ந்திருந்தோம்...
யாரும் இல்லையம்மா இனி
உங்களைப்போல் அன்பாக
அழைப்பதற்கு......
இனி நாம் என்செய்வோம் அம்மா???
அம்மா உங்கள் ஆத்மா காரைக்கால் விசாலாட்சி உடனாய விஸ்வநாதப் பெருமான் திருவடிகளில் இளைப்பாறி மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து இணைந்துகொள்ள எல்லாம் வல்ல விசாலாட்சி சமேத விஸ்வநாதப் பெருமான் திருவடிகளை வேண்டிநிற்கின்றோம்..
உங்கள் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், பெப்பாட்ட பிள்ளைகள்