யாழ். இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கனகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-01-2025
உயிர் சுமந்த தாயே!
எம் வாழ்வின் வலி சுமந்த நீ
மூன்றாண்டாக எம்முடன் இல்லை
ஆனாலும் எம் வாழ்வின்
வசந்தங்களிலெல்லாம் வாழ்கிறாய் ....
கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள்
எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன அம்மா....
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம் முன்னே
உங்கள் முகம் என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் அம்மா ஆறாது
உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை
உங்களுக்கு
காணிக்கையாக
அஞ்சலி செலுத்துகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!