திதி: 25-12-2022
யாழ். இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கனகம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.