Clicky

பிறப்பு 27 JUN 1934
இறப்பு 21 SEP 2025
திருமதி செல்லத்துரை அன்னலட்சுமி
வயது 91
திருமதி செல்லத்துரை அன்னலட்சுமி 1934 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Priya 28 SEP 2025 France

27.06.1934 ல் பூவுலகில் ஈழமணித்திருநாட்டில் யாழ் மண்ணில் உதயமாகி எம்மோடு வாழ்ந்து வந்த பாசமிகு உறவான அமரர் செல்லத்துரை அன்னலட்சுமி அவர்கள் இறைவன் பாதங்களில் 21.09.2025 ல் சங்கமமாகி அமரத்துவம் அடைந்த செய்தி எம்மை துன்பத்தில் ஆழ்த்தியது, அன்பின் உருவமான எங்கள் குடும்ப உறவாக பிரியாத பாச பிணைப்பாக வாழும் காலமதில் இறுக்கமான அன்பை சொரிந்து ஆழமாக வேர் ஊன்றி ஆலமரமாக ஆறுதல் தந்து எங்கள் உயர் மதிப்புமிகு உங்களின் பிரிவால் கண்கள் குழமாகி கண்ணீர் சிந்தி நிற்கிறோம் மனம் ஆறவில்லை தேறவில்லை அன்பான உறவே உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்தனை செய்வதோடு உங்கள் பிரிவினால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அனைத்து குடும்ப உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். விழிகளில் நீங்கா நினைவுகள்,மனதில் அழியாத சுவடுகள்.ஆண்டுகள் பல கடந்தாலும்,அன்புள்ளம் மறக்காது உங்கள் திருமுகத்தை, மௌனமாய் நீங்கள் பிரிந்தாலும்,உங்களின் பாசக்குரல் எங்கள் செவிகளில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும், உங்களின் நினைவுகளுள் நடந்தவை அவை எங்கள் இதயத்தில் என்றும் அழியாது வாழ்ந்து கொண்டே இருக்கும்.  உங்கள் நினைவுகளோடு என்றும் வாழ்வோம்,உங்களின் பாசப்பாதையில் என்றும் பயணிப்போம், தெய்வங்களோடு தெய்வமாய் உங்களை நினைத்து வணங்குவோம்,உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை மண்றாடும் உங்கள் பாசமிகு உறவுகள் எங்கள் மக்கள், மருமக்கள், பேரன், பேத்தி நாம் ரஞ்சன் ரஜனி குடும்பம், பிரான்ஸ்.

Tributes