யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பான அம்மா!
மாதம் ஒன்று போனதே
நீங்கள் எம்மைவிட்டு பிரிந்து
31 தினமாகியும் எம்மால் மீளமுடியவில்லை
நீங்கள் காட்டிய பாதை, எமக்கு அது ஒளிவிளக்கு
நீங்கள் உழைத்த வியர்வை எங்கள்
உடம்பில் ஓடும் உதிரம்
தினமும் உங்கள் கதைகள் பேசி,
உங்கள் தியாகங்கள் பல நினைவில் அலைமோத,
நினைக்கும் போதெல்லாம் உள்ளம் உருகுதம்மா
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு தாயாக வந்திடுங்கள்
நாங்கள் உள்ளவரை உங்கள் நினைவுகளை
எங்களுடன் சுமந்து நிற்போம்
அம்மா, உங்கள் ஆத்மா சாந்திய அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு தினம், ஆன்மீக நிகழ்வுகளுடன் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Neuilly Plaisance, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
27.06.1934 ல் பூவுலகில் ஈழமணித்திருநாட்டில் யாழ் மண்ணில் உதயமாகி எம்மோடு வாழ்ந்து வந்த பாசமிகு உறவான அமரர் செல்லத்துரை அன்னலட்சுமி அவர்கள் இறைவன் பாதங்களில் 21.09.2025 ல் சங்கமமாகி அமரத்துவம்...