உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்லையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே எம்மோடு பயணித்த தெய்வமே! இன்றுடன் ஐந்து வருடம் முடிந்தாலும் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு விலகாது!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
அன்பு ஒன்றை வாடகையாய் கொடுத்து எம் நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவு என் நெஞ்சை விட்டு பிரியாது இன்று பிரிவு என்னும் துயரால் ஐந்து ஆண்டு ஓடி மறைந்தாலும் எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல் நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!