Clicky

பிறப்பு 21 AUG 1945
இறப்பு 05 FEB 2020
அமரர் செல்லப்பா கந்தையா 1945 - 2020 பூநகரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பேர்லின் நண்பர்கள் 07 FEB 2020 Germany

ஆழ்ந்த அனுதாபங்கள்! பேர்லின் தமிழாலயத்தின் முன்னைநாள் நிர்வாகி அமரர் செ.கந்தையா அவர்கள் புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரது பிரிவால் துயரறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மாசாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம். பேர்லின் மண்ணில் தமிழ் மணம் வீச அரும்பாடுபட்ட நல்லுள்ளம். பல மாணவச்செல்வங்களையும் ,ஆசிரியர்களையும் உருவாக்கியதோடு தேசம் நோக்கிய பொதுத்தொண்டுமாற்றிய பெருந்தகை. ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசமுலவிய கண்களும் எங்கே பாய்ந்து துலாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியை போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதி ஒன்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர் கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும் மழழையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் உன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ஓம் சாந்தி!சாந்தி!சாந்தி!

Tributes