
யாழ். பூநகரி செல்லியாதீவைப் பிறப்பிடமாகவும், பளை, பெரிய பளையை வதிவிடமாகவும், ஜேர்மனி Berlin, Warendrof ஆகிய இடங்களை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தையா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னபூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஸ்னுகாந்தன்(உதயன்- இலங்கை), குகதர்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாரணி(இலங்கை), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நடராசா, நாகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரன், காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானசேகரம், ஞானசௌந்தரி, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜநிதி, சிவாநந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சச்சிதானந்தன், முருகானந்தன், சிவானந்தன், சண்முகானந்தன், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்தன், யோகானந்தன், விவேகானந்தன், ஜெயனாந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கேதாகினி, தட்சாகினி(இலங்கை), சங்கவி, தஸ்வின், கவின்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் நிகழ்வு 17-02-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல. 68, K.K.S. வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள விஸ்னுகாந்தன் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to you and your family in this hard time. Selvam Annai will be deeply missed. Gone but never forgotten. He was a kind and gentle soul.