யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைசஞ்சலி.
அன்னை உனை இழந்து ஆண்டு ஒன்று போனாலும்
அழியா நினைவுடன் வாழ்கின்றோம்- தாயே
ஆண்டவன் அருளால் அவன் திருவடியில் உங்கள்
ஆத்மா அமைதி அடையட்டும்- தாயே
இம்மையும் மறுமையும் வாழ்வினில் இயற்கை
இதுவே விதியென எடுத்துரைத்- தாயே
ஈடு இணையில்லா எம் வாழ்வின் தெய்வமே
ஈன்ற பொழுதிலும் பெருதுவந்த- தாயே
உண்டுண்டு மகிழ எமக்கு உணவுதந்து
உலகு உண்டு மகிழவும் உதவிசெய்- தாயே
ஊரெல்லாம் உன்பேர் உழைப்பாளிப்பெண் என்று
ஊர்கூடி அழுதபோது அதை உறுதிசெய்- தாயே
எம் வாழ்வின் தேடல்களில் வளியாகி ஒளியாகி
எம் சோகத்தை நீக்க தாலாட்டவா- தாயே
ஏர் கொண்டு நிலம் உழுது விளை செய்து
ஏற்றமுடன் நாம் வாழ்வதற்கு அருள்செய்- தாயே
ஐயம் இட்டு ஆதரவு நல்க வேண்டும் என்றதுடன்
ஐந்தெழுந்து மந்திரத்தின் பொருளை அறியத்தத்- தாயே
ஒழுக்கத்தில் உயர்நிலையில் இருத்தி எமக்கு
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்று உணரவைத்- தாயே
ஓர் ஆண்டு ஆனாலும் உள்ளமது தாங்காது
ஓயாது உன் நாமம் உரையாது உறங்காது எம் உயிர்- தாயே
ஒளவையின் அருள்மொழி அனுதினமும் அறியத்தந்தீர்கள்
ஒளடதம் செய்வதற்கு இப்போ யாருமில்லைத்- தாயே
அஃது கண்டு நாம் சிந்தை கலங்குகின்றோம்
இறைவன் திருவடியில் சாந்திபெற
அன்னை கண்ணகையை வணங்குகின்றோம்.