யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராமையாச் செட்டியார் வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்வநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.
”அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
எமக்கு, தாயாக மட்டுமின்றி தந்தையாகவும் நின்று
அளவில்லா அன்பையும் நல்லாசிகளையும் அள்ளி வழங்கி
எமக்கு ஊக்கத்தையும், சகோதர ஒற்றுமையையும்
ஊட்டி வளர்த்து
சீரோஉம் சிறப்போடும் ஆளாக்கி விட்ட
எம் இனிய அம்மாவுக்கு,
இம்மலரைச் சமர்ப்பிக்கிறோம்
பிள்ளைகள்
நவில்கின்றோம் நன்றிகளை
எங்கள் குடும்பத் தலைவியாகவும்
குடும்ப ஒளி விளக்காகவும்,
அன்பின் உறைவிடமாகவும்,
பொறுமையின் சிகரமாகவும்,
தாய்மைக்கோர் எடுத்துக் காட்டாகவும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து.
இன்று அமர தீபமாகிவிட்ட எமது
அன்புத் தெய்வம்
இறைபதமடைந்தபோது எமைச் சூழ்ந்த ஆறாத்துயரில்
பங்கு கொண்ட
அனைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் கிரியைகளை
நடாத்திய அந்தணப் பெருமக்களுக்கும் அந்தியேட்டிக்
கிரியை உபசார நிகழ்ச்சிகளை வெகு சிறப்பாக
நடாத்திய உரிமையாளர்களுக்கும், அவரது
பணியாளர்களிக்கும் இங்கு சமூகமளித்த உற்றார்
உறவினர், நண்பர்கள் அனைவருக்கும்
எங்கள் உளங்கனிந்த நன்றிகளையும் வணக்கங்களையும்
தெரிவித்துக் கொள்கின்றோம்
பிள்ளைகள்
We are very sorry for bad one happened. Our condolences for all the families.