யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராமையாச் செட்டியார் வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08/11/2022.
ஆண்டுகள் ஒன்று கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு
நாம் வாழ்ந்து
ஓராண்டு ஓடி
மறைந்து விட்டதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக
விழித்திருந்து
எமக்காய் உன்
உறக்கம் துறந்து மகிழ்ந்திருந்தாய்
அம்மா…
நீங்கள் இல்லாமல்
அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு
ஈடாகுமா?
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
We are very sorry for bad one happened. Our condolences for all the families.