3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் செல்லம்மா குலராஜசிங்கம்
1936 -
2022
துன்னாலை மத்தி, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மத்தி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா குலராஜசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
May the departed soul “Rest in Peace” our thoughts and prayers are with you at this moment.