Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 APR 1936
இறப்பு 16 APR 2022
அமரர் செல்லம்மா குலராஜசிங்கம்
வயது 85
அமரர் செல்லம்மா குலராஜசிங்கம் 1936 - 2022 துன்னாலை மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மத்தி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா குலராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 03-05-2023

ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! தெய்வமே!

பண்ணிய பாவமென்ன உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்

மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்

நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம் உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்

காலங்கள் உருண்டோடினாலும் எம்
எண்ண அலைகள் என்றென்றும் எதிரொலிக்கும்
உங்கள் நினைவுகளுடன்

உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டி நிற்கும் குடும்பத்தினர்  


அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு திதி 03-05-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடா கந்தசுவாமி கோயில் 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada எனும் முகவரியில் நடைபெறும்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 16 Apr, 2022
நன்றி நவிலல் Sun, 15 May, 2022