கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்பரம் சிவகுமார் அவர்களின் 31ம் நன்றி நவிலல்.
அணைந்ததோ ஒளிவிளக்கு? அறுந்ததோ பாசப்பிணைப்பு?
என்ன சொல்லி தேறிடுவோம் உன் பிரிவுதனை
உன்புன்னகை வதனம்தனை இனி எப்பிறப்பில் காண்போம் நாம்!
பொல்லாத காலனவன் எமைப்பிரித்து
உனையெடுத்து பாதகம் புரிந்து விட்டான்!
என்ன சொல்லித்தேறிடுவோம்?
யாரிடத்தில் போய் அழுவோம்?
மனம்தான் ஆறிடுமோ!
உன்னை மறந்து வாழ்ந்திடுமோ!
பொல்லாத துயரமதில் மூழ்கிக்கிடக்கின்றோம்!
எம்மை துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட எமது குடும்ப தெய்வம் செல்லம்பரம் சிவகுமார் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அத்தோடு வவுனியாவில் வீட்டிற்கு வருகை தந்து ஆறுதல் கூறிய அன்பு நண்பர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி பதாதை அச்சிட்டு எமது அனுதாபத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்