
கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்பரம் சிவகுமார் அவரக்ளின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசத்தின் நிழலாய்
பத்து மாதம் சுமந்தாள் தாய்!
நேசத்தின் நிஜமாய்
காலமெல்லாம் நெஞ்சத்தில் சுமந்தார் தந்தை!
முதல் அடி பிள்ளை நடக்கையிலே
முழு நிலவை தொட்டவர்
தோள் மேலும் மார் மேலும்
மிதிக்க வைத்து ரசித்தவர்
நித்தம் நித்தம் ரசித்து வாழ
வியர்வை ரத்தம் சிந்தியவர்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
அவரைப் பற்றி.... சொல்லலாம்
காலம் அவரின் அனுபவம்
கற்று தந்த கணவான்
பாசம் அவரின் பண்பியலில் பனை மரம்
ஏணி படி போல் எமை
சிகரம் ஏற்றி வைத்த உத்தமர்
வையகத்தில் இல்லை நீங்கள்
ஆனாலும் நாம் வாழும் வரை வாழ்த்தும்
பெருமான் நீங்கள்
ஆண்டொன்று கடந்து விட்டாலும் உங்கள்
அன்பிற்கு இல்லை ஈடு இணை
ஓராண்டு காலமதில் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....