

யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:21/11/2022.
ஆண்டு ஒன்று ஓடி
மறைந்திட்டாலும் உங்கள்
நினைவுகள் என்றென்றும்
மறைந்திடுமா?
நீங்கள் எங்களைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறோம்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத்
துளிகள் விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றது!
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும்
மறக்காது உங்கள் நினைவுகளோடு
என்றும் வாடுகின்றோம்.
எல்லாம் அன்பால்
அரவணைத்து பண்பால்
வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது!
ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும்
மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!