யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois, பிரித்தானியா Harrow, Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசராஜா அவர்களின் நன்றி நவிலலும்.
அன்னையின் கையால் ஆசையாய் நீங்கள் உண்ட கவளம்
கனதியாய் எம் நெஞ்சில் நிற்கிறது
சகோதர சகோதரிகளோடு தாயகத்தில் நீங்கள் நின்ற
இறுதி கணங்கள் எம் இதயத்தை பிழிகின்றது
மனைவி பிள்ளைகளுக்காக ஆசையாய் நீங்கள் வாங்கிய பொருட்கள்
உங்களைப்போன்று அசைவற்று நிற்கின்றது
எழுத வார்த்தைகள் இருந்தும் ஏனோ பேனா தடுமாறி தவிக்கின்றது
எமது குடும்பத்தின் உயிர் நாடி
அமரர் செல்லையா கணேசராசா அவர்களின்
பிரிவால் நாம் துயருற்றிருந்த வேளை
நேரிலும், தொலைபேசி மூலமும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும்
எம்மை ஆற்றுதல் படுத்தியதுடன் தோளோடு தோள் நின்ற
அனைத்துக் கரங்களையும் இறுகப் பற்றிக்கொள்வதுடன்
நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
திரு.கணேசராசா அவர்களின் நல் ஆத்மா சாந்தியடைய
யாழ் அரியாலை ஸ்ரீ ஞான வைரவரை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி!
அம்மா, சகோதரன், சகோதரிகள், மனைவி, பிள்ளைகள், மைத்துனர்கள், மைத்துனிகள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Kanesh Anna touched so many lives in the very best way. I’m grateful I got the chance to know him as both a colleague and a friend.