

வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எம்மருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் இறைவா
முடிவில்லாத உம் ஒளி அவர் மேல் பிரகாசிக்கடவது
ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
சகோதரர்கள், சகோதரிகள்