 
                     
         
                            முத்தமிழ் வேந்தரே முடி சூடா மன்னரே எத்திசையிலும் உஙகளுக்கா கீதம் பாட .... மன்னரகள் போல் மலர் தூபி வழியனுப்ப இப் பூமியில் என்ன தவம் செய்தனை . நிழலின் இசையின் தாலாட்டுடன் நின்மதியாய் உறங்குவதேனோ.. உங்களின் பயணத்தில் எங்களை தன்னந்தனியே விட்டதேனோ.. ஆசையாக ஆவணியில் வருகிறேன் மாமா என்றதும் ஆனந்தமாய் எப்போ .... வருவீர்கள் என்றாயே மாமா நீங்கள் எனக்கு நொலைபேசி எடுத்து பேசுவது வழமையான ஒன்று தான் மாமா... இருந்தும் என்னுடன் மணத்தியாலம் கடந்து பேசிய அந்த நாளை..... மறக்கமுடியவில்லை மாமா அன்பான வார்த்தைகள் என்னை இவ்வளவு நேசித்தாரா என் மாமா எனி யாரை கூப்பிடுவேன். சிலருக்கு மட்டுமே அந்த பேசும் வாய்ப்பு மாமா.... உங்களுடன் பயணித்த ஓவ்வொரு நொடியும் என் வாழ்கையில் மறக்கமுடியாதவை மாமா. உங்களின் இறைபதம் வணங்கி பிராத்திக்கின்றோம்.
 
                     
                     
            