கதைகள் கேட்கப்படுவதற்காய் காவியங்கள் (சு)வாசிக்கப்படுவதற்காய் பெருமைகள் பேசப்படுவதற்காய் பேரன்புகள் பெறப்படுவற்காய் செல்வங்கள் சேகரிக்கப்படுவதற்காய் - எங்கள் செல்வமோ பூசிக்கப்படுவதற்காய் தோழன் என்றழைக்க வயதில் வரப்பு என்றாலும் நீ எனக்கு தோழனே. என் தோல்விகளில் உன் உள்ளம் துவழ்ந்ததே என் வெற்றிகளில் உன் கால்கள் மிதந்ததே ஆதலால், நீ என் தோழனாக தான் இருக்கமுடியும் ஆசான் என்றழைக்க கண்டிப்பில் வரப்பு என்றாலும் நீ என் ஆசானே என் நெறிமுறை மிருகின் கட்டி அணைத்தாயே என் முறைசிறு குன்றின் எட்டி தனித்தாயே ஆதலால் நீ என் ஆசானாக தான் இருக்கமுடியும் தோழனோ - இல்லை நீ என் ஆசானோ உன்னோடு நான் குலாவிய நொடிகள் அத்தனையும் முத்துக்கள் அய்யனே. கண்ணன் என வாஞ்சியோடளைத்திருத்தி வேலை, வேடிக்கை, வங்கி நிலுவை என - நீ கேட்கும் கேள்வியின் நிரலுக்கு முற்றுபுள்ளி இருந்ததே இல்லை. எந்தவொரு கேள்விக்கும் நான் பதில்தராது நகர்ந்ததே இல்லை. இப்போதில்லை, எப்போதுமே என் வியப்பெலாம், எப்படி இந்த மனிதனால் மட்டும் என்னை கட்டிப்போட முடிகிறது! நான் நன்கறிவேன், நான் உன் முன்வரிசை நண்பனில்லை, நான் உன் முன்னிருக்கை மாணவனுமில்லை. இருந்தாலும் உன்னை எனக்கும் என்னை உனக்குமாய் மிகமிக நெருக்கமாக்கிக்கொண்டோம். அன்பரே, நாம் கொண்ட பந்தத்துக்கு கவிதா ஒரு காரணியே. என்னை உன்னிடம் சேர்க்கவந்த முத்தாரமே அவள். உன்னியுரை என்னுயிராக்கி, என்வாழ்வில் இடைவிடா கலந்தவரே, சென்று வாருங்கள் செல்வமே, எங்கள் தெய்வமே 🙏