யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு, பிரித்தானியா லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சீனி செல்லத்துரை அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், அகிலா, கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஷ், சுபகண்ணன், தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேதா, அபர்ணா, அருக்ஷன், கஜன், அபிஷாந்த், கனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, அன்னப்பிள்ளை, நவரத்தினம், சோதிமலர்(மணி), தர்மலிங்கம், மற்றும் பத்மநாதன், இராசமணி(மலர்), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, காசிப்பிள்ளை, பரமேஸ்வரி (யமுனா), ஞானப்பிரகாசம், மார்க்கண்டு (மகா) மற்றும் இராசமணி, புஷ்பராணி, சிவஞானம், சிவசோதி (மணி), சரஸ்வதி (வதி), செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல 65/391, காக்கை தீவு, மட்டக்குளி, கொழும்பு - 15 (No. 65/391, Crow Island, Colombo 15) எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
காலம் கண்டு தந்த
சாலச் சிறந்தவரே
தந்தையே உங்களின்
சிந்தையும் நாமென்றே
நித்திரை என்றெல்லோ
நினைத்திருந்தோம்
பத்திரமாய் உள்ளீர்கள் என்றெல்லோ
பயணித்திருந்தோம்
சித்திரை பிறக்கட்டும் என்றெல்லா - சீர் வாங்க
காத்திருந்தோம்
சீரே
சிறப்பே
எங்களின் தவப்பெரும் தந்தையே
உங்கள் வழிதோன்ற
என்ன தவம் செய்தோமோ.
விழி உள்ளவரை
நீர் சொரிந்து
மொழி உள்ளவரை - உங்கள்
புகழ் பாடி துதித்திருப்போம்
தந்தையே,
எல்லாம் எல்லோருக்கும் தந்து வள்ளல் ஆனவரே
எந்தையே,
இன்னொரு பிறப்பு போதாது நாம்பட்ட கடன் தீர்க்க.
அய்யோ எதை சொல்லி எமையற்ற இனி
வையம் உள்ளவரை வாழிய உங்கள் பேரும் பெருமையும்
வள்ளலே
செல்வமே, வாழிய நின் புகழ் 🙏
- திருமிகு சீனி செல்லத்துரை குடும்பத்தார்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details