

திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Magstadt Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீன்கொனறி அன்ரனி செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் உயிருக்குள் உயிரான
தெய்வமே எங்கள் அப்பா...!!
எம் உலகமே நீ தான் என்றிருந்தோம்
எங்களை விடுப்பிரிய உங்களால்
எப்படி முடிந்தது..?
உங்கள் புண்சிரிப்பும்
பாசம்நிறைந்த
அரவணைப்பும்
எங்களை ஓவ்வொருபொழுதும்
ஏங்க வைக்கின்றது அப்பா!!
காலங்கள் பல சென்றாலும்
கடைசிவரை
உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது
இம்மண்ணை விட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றது- உங்கள்
நினைவுகள் என்றென்றும் எங்களுடன்
மீண்டும் வந்து பிறப்பாய்
இம்மண்ணில் ஒர் குழந்தையாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவில் மனைவி, பிள்ளைகள்
(டிவோன்சியா, அக்னிற்ரா, ஆரோன்)
உடன்பிறப்புக்கள் மற்றும் உறவினர்கள்