1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சற்குணராசா சண்முகம்
(குணம், பூனகரி)
வயது 63
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணராசா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:05/06/2022
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி
மறைந்தாலும்
அகலாது
உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த
எங்கள்
அன்புத் தந்தையே!
கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லா
உம் சிரிப்பும்
காண்பது எப்போது
எம் இதய தெய்வமே
நீங்கள்
வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு
நீங்கள் இல்லை என்ற
குறையைத்
தவிர எக்குறையும் இல்லை
உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்