

யாழ். கோண்டாவில் மேற்கு பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியப்பிரியா மனோரதன் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்கண்டு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோரதன் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சத்தியசீலன், ஜெயசீலன், தர்மசீலன், சத்தியவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வளர்மதி, அஜந்தா, சுகந்தினி, சுமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்தனா, சங்கர், சௌமியா, சௌஜனா, தர்ணிகா, அஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாணுஷன், சுவேதா, வருண் ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி தொடக்கம் மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் என் மனதிற்குள் இருக்கும் பாசம் என் மரணம் வரை உன்னிடம் பேசும்.