7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி
(ரஞ்சினி)
வயது 48
அமரர் சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி
1971 -
2019
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Deepest condolences, from Uthayan london,vaduvini