4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சதாசிவம் சச்சிதானந்தசிவம்
(Kili)
வயது 70
அமரர் சதாசிவம் சச்சிதானந்தசிவம்
1949 -
2019
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சச்சிதானந்தசிவம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு குலதெய்வமே
பாசம் என்னும் பெரும் கயிற்றால் எம்
அனைவரையும் கட்டி அரவணைத்து
முன்னேற்றி வைத்த எமது தந்தையே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு நான்காகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எங்கள் துன்பங்கள் அனைத்தையும்
உங்கள் இதயத்துள் தாங்கி
உறக்கத்திலும் விழிப்பிலும் எம்மைக்
கண்ணிமைபோலக் காத்து
ஒளிமிகுந்த வாழ்க்கைப் பாதையில்
எம்மை இட்டுச் சென்ற தந்தையே
இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே நாம்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அப்பா..!
உங்கள் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
You are Star of our family. You always will be. We never forget the light of our life.