யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணதாஸ் முருகேசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவி, பிள்ளைகள்
வசந்த உற்சவத்தின்
மகிழ்நிலையில் நானிருக்க
கைதவறி நீங்கள் போனதெங்கே
நொருங்கிப் போய் நிற்கின்றேன்
எம் மீள்காலமது கானலாகிப் போயிற்றே
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது
இன்று
உங்களை பிரிந்து பிரிவு
என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்...
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
பொழுதும் விடியுதில்லை….
ஊனும் இறங்கவில்லை…..
தினம் நூறுமுறை அழைக்கின்றோம்…
மீண்டும் எழுந்து வருவாயோ அப்பா…
திக்கற்ற வழியிடையே தெய்வமாய் வந்திடுக
உங்களையன்றி அகிலமதில் யாருண்டு எங்களுக்கு?
சகோதரங்கள்
தம்பியாய் நல்ல அண்ணனாய்
எப்போதும் எம்மோடு இணைந்து நின்றவரே!
ஆண்டுகள் பல ஆனாலும்
மறக்க முடியாத மகத்துவம் நீ...
நினைவில், நித்திரையில்,
எங்கள்
உணர்வில் உள்ளத்தில்
எப்போதும் - நீ
கனவில்,
கற்பனையில் எங்கள்
கண்பார்க்கும்
இடமெல்லாம் - நீ
நீ இல்லாத நாட்கள்
உயிரில்லாத நொடிகளாய் - போகுதய்யா..
நீ வாழ்ந்த வீடு நீ கடந்த இடம்
என்று
உன்னை நாங்கள் நினைத்திருக்க
நீ மட்டும் எங்கு போனாய்
எங்களைவிட்டு - ஏன் பிரிந்தாய்?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்