யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணதாஸ் முருகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உன் நினைவுகள்
எம் வாழ்வின் ஒளி தீபமே
எப்படி மறப்போம் உனை மகனே!
ஓராண்டு கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே....
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு
என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
அன்புள்ள உடன்பிறப்பே
எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
வாழ்க்கை என்பது
இறைவன்
வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக பன்னிரண்டு
மாதங்களாகின
அருகில் நீங்கள்
இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்