1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
நீர்கொழும்பு கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசிதரன் காளிதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச்சென்றீர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
சசியின் இழப்பையிட்டு அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின்ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா...