யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சசிரேகா மகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா என்றால் அன்பு
உன்போல் அன்பு செய்ய
யாருமில்லை இவ்வுலகில்...
அன்பு, அக்கறை, பாசம், நேசம்
தியாகம் என்று
எல்லா உணர்வுகளையும்
காட்டினாயே அம்மா!
இனி எங்கே தேடுவோம்
இவற்றை எல்லாம்..
விரல் பிடித்து பள்ளி சென்றோம் உன்
குரல் கேட்டுக் குதுகலித்தோம்
படிப்படியாய் வளர்த்தெடுத்து
பட்டங்களும் பெற வைத்து
விட்டுவிட்டு சென்றுவிட்டாய்
அம்மா எம் இதயம் வலிக்கிறது
என்னென்ன ஆசைகளை உன்
மனதினுள் பூட்டி வைத்தாய்
எண்ண எண்ண எம் மனது
வேதனையில் துடிக்கிறது
கண்முன்னே நீங்கள்
காணாமல் போய் விடினும்
எம்மிதயத்தில் உங்கள் முகம்,
என்றென்றும் உயிர் வாழும்
உயிர் தந்த உறவே!
காணிக்கை கேட்காத தெய்வம் நீ!
கண்ணீர்ப் பூக்களால்
அர்ச்சிக்கின்றோம் அம்மா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.