யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசிரேகா மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-01-2025
ஆண்டொன்று ஆனது அம்மா!
ஆறவில்லை எம் துயரம் அம்மா!
மீண்டெழுந்து வந்திடு அம்மா!
மீளா துயரை துடைத்திட அம்மா!
உனை இழந்து நாமெல்லாம் உருக்குலைந்து போனோம் அம்மா
பண்ணிய பாவமென்ன உங்களை பறி கொடுத்து தவிக்க அம்மா
இமை மூடி தூங்கினாலும் விடை தேடி அழுகின்றது இதயம் அம்மா
யாரிடம் பகிர்வோம் இந்த மனம் படும் வேதனையை அம்மா
பிரிவு என்னும் தண்டனையால் நித்தமும்
நிம்மதி இழந்து துடிக்கின்றோம் அம்மா
ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும்
மனம் அமைதி அடையாது அம்மா
அன்பாய் அழைத்து ஆசையாய் அரவணைத்து
இரவு பகல் பாராது எமை கண்ணை இமை காப்பது போல் காத்து
அறிவுதனைப் புகட்டி ஆனந்தமாய் நாம் வாழ
உங்களையே அர்ப்பணித்து
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுய நலம் இல்லாத இதயம் அம்மா...அம்மா..அம்மா...
பார்க்கடலில் மாதவனே லக்ஷ்மிதேவியை பக்கத்தில் வைத்தார்
எங்கள் அப்பாவோ உங்களை அம்மா தன் இதயத்தில் வைத்துள்ளார்
என்றும் எமது கரம் பிடித்து வழிகாட்டும் அம்மா
நீங்கள் எப்போதும் எங்களுடைய இதயத்தில்
இருப்பதாக உணர்கின்றோம் அம்மா
எத்தனை பிறப்பிலும் உங்களுக்கு பிள்ளைகளாய் பிறந்திட
இறைவனை வேண்டி உங்கள் ஆத்மா
இறைவன் திருவடியில் நிம்மதியாக
சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
To our beautiful, warm, & giving Reka - Thank you for everything you’ve done for this family. We love you & miss you so much