யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர் அணையாது
என்றுமே.. எம் மனதில்
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
பத்து ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா! எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க!!!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உன் நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை
அன்றில்லை, இன்றில்லை என்றுமே! எங்கள்
உடலில் உயிர் உள்ள வரை உங்கள் நினைவுகள்
என்றும் அழியா பொக்கிஷம் அம்மா!
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆண்டவன் மறப்பதுண்டோ
நம் ஆறுயீர் இருக்கும்வரை
தாயே உம்மை நினைக்காமல்
இருப்பதுண்டோ!!
அன்பின் அர்த்தம் புரியவில்லை
அன்று உம்மை இழக்கும்வரை
இன்று பத்து ஆண்டுகள் ஆனாலும்
எம் உள்ளத்தின் உயிர் முச்சில்
வாழ்கின்றீர்கள் நாங்கள் இறக்கும்வரை
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உன் நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், சகோதர சகோதரிகள், பெறாமக்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!