யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா
அன்பாலும் பண்பாலும் எமை கவர்ந்த
பண்பு நிறைந்த தாயே பாசத்தின் ஊற்றே
துன்பத்தை உனக்குள் புதைத்து இன்பத்தை எமக்குள்
விதைத்த தாயே உன் நினைவால் துடிக்கின்றோம்!
தவிக்கின்றோம் இன்றுவரை நாமம்மா
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
ஆண்டுகள் ஒன்பது ஓடி மறைந்தன
எமை அரவணைத்த அம்மா எங்கே
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே?
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே
இன்று நீ எங்கே அம்மா!
அன்பின் அர்த்தம் புரியவில்லை
அன்று உம்மை இழக்கும்வரை
இன்று ஒன்பது ஆண்டுகள் ஆனாலும்
எம் உள்ளத்தின் உயிர் முச்சில்
வாழ்கின்றீர்கள் நாங்கள் இறக்கும்வரை
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உன் நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!