யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் வசிகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீ எங்களை கைகளில் தாலாடிய போதெல்லாம்
உன் அன்பின் கடல் எங்களைச் சூழ்ந்து
உன் மடி சிறியதானாலும்
அதில் எங்களுக்கு உலகமே இருந்தது
இன்று நீ இல்லாத இந்த உலகத்தில்
விழிநீர் எங்கள் கண்களில் தங்கியிருக்கிறது
உன் கைப்பிடி இல்லாத அழுகைகள்
எங்கள் இதயத்தைப் பிள்ந்திருகிறது
அம்மா நீ எங்களை மகிழ்ச்சி
நம்பிக்கை, காதல் என நினைத்தால்
உன் அரவணைப்பு அற்ற காலம்
பரிதாபத்தில் பயணம் ஆகிவிட்டது
அம்மா உன்னோடு பேச முடியாத
வெறுமையான இந் நாளில் உன்னால்
நாம் ஒளிந்து கொண்ட அன்பு
என்றும் அழியாது
உன் வார்த்தைகள், உன் அழகிய சிரிப்புகள்
எங்களின் நினைவுகளின் வெளிச்சமாகும்
நீ எங்கிருந்தாளும் உன் ஆசி
எங்களை தாங்கும்
உங்களை வாழ்நாள் முழுவதும்
எண்ணி குடும்பத்தினர
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.