1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரஸ்வதி சந்திரலிங்கம்
வயது 70
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குளாய், வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சந்திரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு ஓன்று கடந்ததுவோ?
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
என்றென்றும் எழிலோடு எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய்!!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்