1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் சபேசன்
1978 -
2021
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் தெற்கு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Bævervej 8 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் சபேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-04-2022
விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
ஓராண்டு கழிந்தது இன்று
இதயம்
கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...
எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி
தெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!
அப்பா, அப்பா விம்முகிறது சோகம்
தவிக்கிறோம் உம் பிரிவால்
துடிக்கிறோம் உம் மறைவால்
தினம்.... தினம்... கண்ணீரால்
நனைகின்றோம் நாதியற்று...!
கவலைகள் அனலாக எரிக்கின்றன...!
வலிகளினால் நெஞ்சம் கனக்கின்றது..!
தாள முடியவில்லை தெய்வமே!
வாருங்கள் எங்கள் வேதனையை போக்கிடுங்கள்
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்!!!!
தகவல்:
குடும்பத்தினர்