Clicky

பிறப்பு 03 MAY 1975
இறப்பு 22 SEP 2023
அமரர் சந்திரராசா அகிலன்
வயது 48
அமரர் சந்திரராசா அகிலன் 1975 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆசிரியை அருணா இராசகிளி செல் தமிழ்ச்சோலை 02 OCT 2023 France

வளம் கொழிக்கும் கோணமலை வண்ண மகன் உதித்த இடம் தமிழ் வனப்பு செய்வதற்கு தகுதி உள்ள செந்தமிழன் தமிழ் வளர்க்கும் கழகமாம் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தில் தலைமை பொறுப்பாளர் அன்பும் அறிவும் அடக்கமும் ஆளுமையும் தன்னகத்தே நிறைந்த மகன் நின் சுந்தர தமிழின் சொல்லாடல் சுவைப்பட இனிக்கும் தமிழாற்றல் அறிவுச்சுடரின் ஆளுமை கண்டோ காலனுக்கும் பிடித்திருக்கோ கடுமையான நோய் நோய் காட்டி தன்னகத்தில் எடுத்துவிட்டார் அன்பான துணைவியும் அறிவான பிள்ளைகளும் அலைகடல் ஓய்ந்தது போல் அமைதியாய் கலங்கி நிற்க உறவுகளும் நண்பர்களும் உளம்தவித்து ஏங்கி நிற்க மீளாத் துயில் கொண்டாய் இயற்கை நியதி என்று எப்படித் தான் தாங்குவது இறைவா! நாம் அனைவரும் கண்ணீர் பூக்களால் அஞ்சலி செலுத்துகின்றோம் அமரர் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி????

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 28 Sep, 2023
நன்றி நவிலல் Fri, 20 Oct, 2023