அன்பான சந்திரன் அண்ணா எங்கேயோ பிறந்து எங்கேயோ வாழ்ந்து எங்கேயோ மறைந்து விட்டீர்கள். நினைக்கும் போது இதயம் வலிக்கின்றது. தங்களை பார்க்க மருத்துவமனை வந்த போது நான் யாரென்று கேட்டேன் தேனா என்று சொன்னீர்கள். அந்த இனிய குரல் எங்கே போனது. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு பின்னால் ஒரு கதை இருக்கும். ஆனால் உங்களுக்கு பின்னால் இருந்த கதை உங்கள் குடும்பத்தை முன்னேற்றி அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று. அயராது உழைத்த ஒரு மாமனிதர் என்பதுதான் .கடைசி நேரத்திலும் உங்கள் உறவுகள் உங்களோடு இருந்த போது அதை நான் உணர்ந்தேன். இப்படிப்பட்ட நல்ல மகனைப் பெற்ற தந்தையும் தாயும் உங்களை சேர்த்து அனைத்து கொண்டார்கள். அதுதான் உண்மை. சந்திரன் அண்ணாவின் பணிவான குரல் இன்னும் காதுகளில் ஒலிக்கின்றது வானத்தில் ஒளிரும் சந்திரன் உலகுக்கே ஒளிர்வது போல நீங்கள் உங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரின் மனதிலும் ஒளியாக இருப்பீர்கள். நீங்கள் மறையவில்லை எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திப்போம்.