பாசமிக்க சந்திரன் அண்ணாவின் திடீர் மறைவு செய்தியை அறிந்தவுடன் மிகுந்த துயரத்துக்குள்ளானேன். உங்களை நேசிக்கும் எல்லோருக்குமே இது ஒரு துயரமான நாள் என்பதும், இழப்பினால் ஏற்பட்ட அந்த வலியையும் நாமறிவோம். நீண்ட காலம் பாசம் கலந்த ஒரு பந்தம் நம் குடும்பத்துக்கிடையே இருந்து வந்தது சந்திரன் அண்ணா. கனிவான பேச்சு, பண்போடு பழகும் தன்மை, அன்பு போன்ற நற்குணங்கள் மிகுந்த உங்களை இறைவன் இவ்வளவு சீக்கிரத்தில் தன்னிடம் அழைத்திருக்கக்கூடாது. உங்களோடு பழகிய நாட்கள் என்றும் எங்கள் எல்லோரின் உள்ளத்திலும் நிலைத்திருக்கும். ரவி, சிவா, பாலன், அருணா, தங்கைகள் உங்களனைவருக்குமே இறைவன் இந்த கடுந்துயரமிக்க தருணத்திலிருந்து மீண்டு வர உதவி செய்யட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.