யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி அன்ரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தொலைதூரம் இருந்தாலும் தொலைபேசி
அழைப்பெடுத்து
கனநேரம் கதைப்பாயே;
காலைப்பொழுதினிலே கண்விழிப்போம்- உன்
கலகலப்பான பேச்சினிலே
”அத்தை” என அன்புக்கதை பேசும்
கண்ணான மருமக்களும்
“அக்கா” என அழைக்கும்
அன்பான சகோதரரும்
”வசந்தி” என அமுதமொழி பேசும்
அன்னையையும் தவிக்க விட்டு
எங்கு தான் சென்றீரோ?
கனடாவில் கணப்பொழுதில் நிகழ்ந்ததை
கனவாவே நினைத்திருந்தோம்
அலைபேசி அழைப்பு அதிரவைத்தது
அலறித்துடித்தோம், அங்கலாய்த்தோம்,
தேற்றுவாரின்றி நாம் தேம்பி அழுதோம்
ஆறவில்லை இன்றும் எம் துயரம்...
காற்றோடு நேற்று வந்த செய்தி
கனவாகிப் போகாதோ
வஞ்சம் உமக்கில்லை, நெஞ்சம் கனக்கிறது,
நெருப்பாய்க் கொதிக்கிறது
கொஞ்சமும் இரக்கமுல்லை, காலனவன் கவர்ந்தானோ
கண்ணீரில் கரையும் கணவனின் நினையும்
தினம் தினம் உருகும் சொந்தங்கள் பலவும்
வசந்தி, உன் வரவை எதிர்பார்த்து
வாசலில் காத்திருந்தோம்
வசந்தம் வீசவில்லை எங்கும் ஒரே நிசப்தம்
ஏக்கம், ஏமாற்றம் ஏற்கமுடியவில்லை
உன் இழப்பை
தாங்கமுடியவில்லை தவிக்கின்றோம்
உன் நினைவால்
விதி வரைந்த கோட்டிற்கு
விதி விலக்கு யாருமல்ல,
கதி கலங்கி நிற்கின்றோம்
காலனுக்கும் கண்ணில்லை
உன்னோடு உடனிருந்து உறவாடி
உயிருக்குப் போராடி
கூடு கலைந்திட்ட குருவியாய் சிறகிழந்து தவிக்கின்றார் உன் கணவர்
ஆறுதல் அளித்திட அருகே நீ வந்திடாயோ?
கண நேரம் பிரியாத- நீ
கண்ணுக்கெட்டது ஏன் கனதூரம் சென்றாயோ
எம் கனவிலும் தோன்றவில்லை
உம் நினைவாலே உருகுகிறோம்
கனவுகள் நனவாகும்
மறுபிறப்புண்டென்றால் எங்களையும்
மறந்திடாதே!
ஆண்டாண்டு சென்றாலும் ஆறாது எம் துயரம்
ஆறாத்துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
ஆண்டவன் மடியில் அமைதியாய் உறங்குங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் நினைவு நாள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று எமது இல்லத்தில் மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை நடைபெறும் ஆராதனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May soul rest in peace