யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திராதேவி அன்ரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கழிந்தது ஓராயிரம் யுகமாய்.....
ஈரவிழியோடு கழிக்கின்றோம் காலமதை
நொடிப்பொழுதும் உம் நினைவு எம்மை விட்டு அகலாது
காலங்கள் கடந்தாலும் உன் கோலங்கள் அழியாது
பாசமுடன் நீ எம்மை நேசமுடன் நேசித்தாய்
யோசனைகள் வந்தாலும் ஆறுதல்கள் கூறி நிற்பாய்
தேறுதல் எமக்கில்லை தேற்றுவார் யாருமில்லை.
என் வசந்தி எங்கும் செல்லவில்லை என ஏங்கி
பகல்வேளை முழுவதும் உனக்காய் உணவளிக்கும்
அன்பான கணவனும் இணை பிரியா அன்றிலாய்
இறகிழந்து தவிக்கின்றார்-உன் கல்லறையை
கண்ணீரால் நனைக்கின்றார்
சோகம் தாங்காத துயரமதை சொல்ல முடியவில்லை
வாய்விட்டு அலறுகிறார் வடிக்க வார்த்தை இல்லை
வசந்தி வசந்தி என அழுது புலம்பும் அன்னையும்
அக்கா....என அரற்றும் அன்பான சகோதரரும்
அத்தை இருந்திருந்தால் என அங்கலாய்க்கும் அன்பு மருமக்களும்
உன் நினைவால் ஏக்கமுற்றுத் தவிக்கின்றனர்
கள்ளமில்லா உன் சிரிப்பு
கபடமில்லா உன் பேச்சு
காலனையும் கவர்ந்துவிட
கண்ணீரில் கரைந்த இரவுகளும்
தூக்கம் தொலைத்த உறவுகளும்
ஏக்கம் நிறைந்த நினைவுகளும்- எமை
வாட்டி வதைக்க எங்கம்மா சென்றுவிட்டாய் ?
உன் கனவுகள் நிறைவேறும்
காலம் பதில் சொல்லும்
உறவுகள் நிறைவேற்றும்
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்
மாண்டார் மீண்டு வருவாரோ?- உம்
நினைவுகள் எமைத் தீண்டாத நாளில்லை
வேண்டாத பொழுதுகளாய் வெறுமனே கழிக்கின்றோம்
ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது உம் நினைவு
தேம்பி அழுகின்றோம் தேறவும் முடியவில்லை
தோற்றமும் மறையவில்லை
ஏற்றம் பல கொண்டு உமக்காய் வாழ்ந்திடுவோம்
என்றும் உம் நினைவோடு....
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி...
May soul rest in peace