Clicky

அன்னை மடியில் 14 APR 1955
இறைவன் அடியில் 21 MAY 2021
அமரர் சாந்தலிங்கம் சிவநாதன்
வயது 66
அமரர் சாந்தலிங்கம் சிவநாதன் 1955 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Santhalingam Sivanathan
1955 - 2021

ஓராண்டு நினைவு அஞ்சலி அமரர் சாந்தலிங்கம் சிவநாதன் 21.05.302022 உன்வரவிற்காய் காத்தே நான் இருக்கின்றேன்… கண்ணுக்குள் ஒளியாகி நீ இருந்து காணும் காட்சி எல்லாம் நீயாகித் தோன்றுகின்றாய் மண்ணுலகம் தன்னைவிட்டு மாயமாய் நீ அன்று மறைந்தாலும் எண்ணத்தில் என்றும் நிறைந்து நின்று எல்லாமே நீ என்று உணர்த்துகின்றாய் விண்ணுலகில் நீ இருந்தாலும் விடுமுறை எடுத்திங்கு வரவேண்டும் வாழ்விலே தோற்று நீ வீழ்ந்தாலும் வீரமாய் எழுந்தேதான் நின்றாய் ஐயா பொன்னுடல் பூமியில் சாயும்போதும் என்னுயிர் தாங்கி நான் நின்றேன் ஐயா எத்தனை தவறது என்று எண்ணி இன்றுவரை நானும் வாழ்கின்றேனே சுற்றமும் சூழலும் போற்ற நாங்கள் தூய்மையாய் அன்பிலே கட்டுப்பட்டு வாழந்திட்ட நாட்கள்தான் நினைவில் வந்து வாட்டுதல் உனக்கங்கே தெரியுதாய்யா எத்தனை பிறவி நான் எடுத்தபோதும் என்னுயிர் தம்பியாய் நீ வருவாய் சத்தமே இல்லாத உலகில் நாங்கள் சந்தோசமாகவே வாழவேண்டும் மீண்டும் நாம் பூமியில் பிறக்க வேண்டும் பூலோகம் தனைச் சுற்றி மகிழ வேண்டும் அன்பையே சொத்தாகக் கொண்டு நாங்கள் அகிலத்தை நமக்குள்ளே அடக்க வேண்டும் கண்ணீரில் இறைவனைக் கேட்டே நின்றேன் கட்டாயம் இவ்வரம் கிடைக்குமையா உயிரற்ற உடலாகி வாழும் வாழ்க்கை உள்ளத்தை வதைத்துமே கொல்லுதய்யா வந்தாயோ வருவாயோ தெரியவில்லை உன் வரவிற்காய் காத்தே நான் இருக்கின்றேனே!

Write Tribute