யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சிவநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உன் நினைவில் நாம் வாழ்வோம்.....
ஆலமரம் போலிருந்தாய் அதன்கீழ் மகிழ்ந்திருந்தோம்
ஆலமரம் சரிந்ததய்யா அலறுகின்றோம்
அநாதைகளாய் போய் வாறேன் என்று சொல்லி
நீ போய் வந்த திசைகளெல்லாம்
நாம் இருந்து தேடுகின்றோம் நடு நடுங்கி வாடுகின்றோம்
தூக்கத்திலும் உன் நினைவு தூங்கவில்லை எம் மனது
ஏக்கத்தினைச் சுமந்து அது எப்போதும் துடிக்கிறது
எத்தனையோ சோதனைகள் உன் வாழ்வில் வந்ததய்யா
அத்தனையும் தாங்கி வென்று
அதில் சாதனைகள் படைத்து நின்றாய்
சத்தியத்தின் திரு உருவே சாந்தத்தின் மறுவடிவே
யமனிடத்தில் போராடி தோற்று நீ வீழ்ந்ததென்ன
முப்பத்தொரு நாட்கள் முழுமை அடைந்ததய்யா
நம்ப எம்மால் முடியவில்லை நாம் துடித்து வாடுகின்றோம்
பார்க்கும் இடம்எல்லாமே உன் பாச முகம் தோன்றுதய்யா
நீக்கமற எங்கள் நெஞ்சில் நிலைத்து நீ வாழுகின்றாய்
இதயமதை விளக்காக்கி
எண்ணமதை நெய்யாக்கி
ஏற்றி வைத்தோம் தீபமதை எங்கள் உயிர் உள்ள மட்டும்
உன் நினைவில் நாம் வாழ்ந்து உன்னிடமே சங்கமிப்போம்
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டி நின்றோம் இறைவனையே
என்றும் உங்கள் நினைவைச் சுமந்து வாழும்
குடும்பத்தினர்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.