

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகதாசன் ஆனந்தபூரணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 25-02-2022
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது..
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் நடைபெற்று பின்னர் மதிய போசன நிகழ்வு நடைபெறும். இதை தனிபட்ட அழைப்பாக ஏற்று உற்றார், உறவினர், நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.