Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JUL 1968
இறப்பு 08 DEC 2010
அமரர் சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன் (குமரன்)
வயது 42
அமரர் சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன் 1968 - 2010 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள்

காற்றோடு கலந்து நீ
இறைவனடி சேர்ந்தாலும்
 கோலத்தால் அழிந்து
 கல்லறை துயின்றாலும்
 காலத்தால் அழியாத
 கற்சிலை ஆனாலும்
நினைவுக் கல்வெட்டில்
நின்நாமம் நிலைத்தாலும்
எம் இதய மென்தட்டில் -உன்
நினைவுத் தடங்கள்
நீங்காத நினைவாக
நிலைத்து நிற்கும் குமரா!

வானவெளியில் ஒளிர்கின்ற
 லட்சம் - கோடி நட்சத்திரங்களில்
 ஒன்றாய் நீ ஜொலிப்பதை உணர்கின்றோம்!

நெஞ்சுக்கு நினைவாகி- எம்
 உயிருக்கு வலியாகி காரிருளில்
கலந்துவிட்ட- எம் உயிரின் உயிரை
 மனவிளக்கு ஏந்தியே தேடுகின்றோம்!

உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: உனது பிரிவின் துயரோடு தாய், சகோதரங்கள்